CV Shanmugam: ’சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷை செந்தில் பாலாஜி நினைத்து பார்க்க வேண்டும்’ சி.வி.சண்முகம் அறிவுரை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cv Shanmugam: ’சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷை செந்தில் பாலாஜி நினைத்து பார்க்க வேண்டும்’ சி.வி.சண்முகம் அறிவுரை

CV Shanmugam: ’சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷை செந்தில் பாலாஜி நினைத்து பார்க்க வேண்டும்’ சி.வி.சண்முகம் அறிவுரை

Kathiravan V HT Tamil
Jun 21, 2023 02:52 PM IST

தைரியம் இருந்தால் விசாரணையை சந்திக்க வேண்டியதுதானே? உன் பக்கம் நியாயம் இருந்தால் ஏன் அச்சப்படுகிறாய்? - சி.வி.சண்முகம் கேள்வி

மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் - அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் - கோப்புப்படம்
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் - அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் - கோப்புப்படம்

சென்னை மேயர் எங்கே என்று பார்த்தால் அவர் இத்தாலியிலே பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சென்னை மேயர் மேல்நாட்டு உடை அணிந்து கொண்டு உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார்.

’இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய்’ என்பது போல் மத்திய அரசு என்றாலே ஸ்டாலின் நடுநடுங்கி கொண்டு இருக்கிறார். மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதை கேள்விப்பட்ட அம்மா அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கினார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அவர் வீட்டில் சோதனை செய்து வழக்குப்பதியப்பட்டது.

இன்றைக்கு இருக்கிற இதே முதலமைச்சர் கரூருக்கு சென்று ’செந்தில் பாலாஜி ஒரு மோசடி பெருவிழி, கோடிக்கணக்கான பணத்தை அவரும் அவரது சகோதரரும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என்று சொன்னாரா இல்லையா?

மோசடி செய்துள்ள செந்தில் பாலாஜியை அரசு காப்பாற்ற பார்க்கிறது. உன்னுடைய முழு அதிகாரத்தை பயன்படுத்தினாலும் செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாது. செந்தில் பாலாஜி வாயை திறந்தால் அடுத்து சிறையில் இருப்பது யார்? ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாயை பெற்ற செந்தில் பாலாஜி தனக்கு 2 ரூபாயும், மீதி 8 ரூபாயை முதலமைச்சருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சென்றுள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

தைரியம் இருந்தால் விசாரணையை சந்திக்க வேண்டியதுதானே? உன் பக்கம் நியாயம் இருந்தால் ஏன் அச்சப்படுகிறாய்? செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு வந்து ஒருவாரம் கழித்து 8ஆவது நாள் 90 சதவீதம் அடைப்பு வந்து உயிரோடு இருக்கிறர அதிசய மனிதன் செந்தில் பாலாஜிதான்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டுக்கு சென்றால் தானும் தனது குடும்பமும் கலால்துறை மூலம் ஆண்டுக்கு 20,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது மாட்டிவிடுவோம் என்று செந்தில் பாலாஜியை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை யாருக்காகவும் எதற்காவும் கவலைப்படமாட்டார். தனது வேலை முடிந்துவிட்டால், தனக்கு ஆபத்து நெருங்குகிறது என்றால் எவ்வுளவு பெரிய நண்பனாக இருந்தாலும் காவு கொடுத்துவிடுவார் என்பது வரலாறு. இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது அவரோடு நகையும் சதையுமாக இருந்தபோது அண்ணா நகர் ரமேஷ் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி முறைகேடுகள் விசாரிக்கப்படுகிறது என்று தெரிந்த உடன் அவரது குடும்பத்தோடு இறந்துவிடுகிறார். கேட்டால் அந்த வழக்கு தற்கொலை என்று முடித்து வைக்கப்பட்டது. 2ஜி வழக்கில் சாதிக் பாட்சா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்.

உடனடியாக அவரது மனைவிக்கு கூட தெரியாமல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, முகத்தை கூட மூடி சாதிக் பாட்சாவை எரித்தார்கள். எனது கணவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது மனைவி குற்றம்சாட்டுக்கிறார். அந்த நிலைமைதான் செந்தில் பாலாஜிக்கு வரும். சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷை மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜி நினைத்துக் பார்த்துக்கொள்.

ஜெயிலுக்கு சென்றால் கூட ஒரிரு ஆண்டில் வெளியே வந்துவிடலாம், ஆனால் இல்லாத நோய்க்கு இருதயத்தை அறுத்தார்கள் என்றால் உன் ஆயுள்.... அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.