ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை செய்வது வழக்கம். தற்போது ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல் என விசிக விமர்சனம்.

விக்கிரவாண்டி மாநாட்டில் ஆளுநர் பதவியே வேண்டாம் என்று கூறிய விஜய், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தது ஏன் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகலில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து 3 பக்க மனு அளித்தார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

