Crime: அய்யோ கொடூரம்; குடும்ப தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை!-crime oh the horror a farmer was hacked to death in a family dispute - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: அய்யோ கொடூரம்; குடும்ப தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை!

Crime: அய்யோ கொடூரம்; குடும்ப தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 01, 2024 08:47 AM IST

பொள்ளாச்சியில், கணவன் மனைவி இடையேயான தகராறை தடுக்கச் சென்றவர், கணவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோயில் அருகே வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வயது 59. விவசாயம் செய்து வந்த ராதா கிருஷ்ணனுக்கு 7 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயது 48. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சரஸ்வதியின் பெற்றோர் அவருக்கு ஒரு ஏக்கர் நிலம் நிலம் கொடுப்பாதாக தெரிவித்து இருநததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை விற்று 27 லட்சம் ரூபாயை சரஸ்வதி இடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தொகையில் கணவர் ராதாகிருஷ்ணனுக்கு பங்கு தராமல், சரஸ்வதி, ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இதையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் தோட்டத்தில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர் சிவக்குமார். (இவருக்கு வயது 36). சரஸ்வதியும், ராதா கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்த போது சிவக்குமார் அங்கு சென்றுள்ளார். சண்டையில் ஈடுபட்ட ராதா கிருஷ்ணனையும் சரஸ்வதியையும் சமாதானப்படுத்த சிவக்குமார் முயன்றார்.

அப்போது சிவக்குமார், ராதா கிருஷ்ணனை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அப்போது ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் நீ தான் என் மனைவியை இங்கு அழைத்து வந்தாய். உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையையும் என்று கோபமாக பேசி உள்ளார்

அப்போது, ராதாகிருஷ்ணன் தன் வீட்டில் இருந்த அரிவாளால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் ராதாகிருஷ்ணனிடம் இருந்த அரிவாளை பிடுங்கி, அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சத்தம் கேட்டு ராதா கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி அங்கு ஓடி வந்து பார்த்தார்.

சிவக்குமார் வெட்டியதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட சரஸ்வதி கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராதாகிருஷ்ணன் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ராதாகிருஷ்ணன் வெட்டியதில் படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கும், சிகிச்சை அளிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி இடையேயான தகராறை தடுக்க சென்றவரே, கொலை செய்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.