CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் நேற்று இரவு கற்கள் மற்றும் பாட்டில்களும் வீசப்பட்டு உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் கற்கள் வீசப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் பாட்டில் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் நேற்று இரவு கற்கள் மற்றும் பாட்டில்களும் வீசப்பட்டு உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் கற்கள் வீசப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பாலன் இல்ல வளாகத்தில் உள்ள காவலர்களுக்கும் அருகில் வசிப்போருக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தின் காவலாளி அறை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து பாட்டில் வீசிய ஆறு நபர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் மாம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்