Tamilisai About Cow Urine: ’மாட்டின் சிறுநீர் ஒரு அமிர்த நீர்’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilisai About Cow Urine: ’மாட்டின் சிறுநீர் ஒரு அமிர்த நீர்’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி!

Tamilisai About Cow Urine: ’மாட்டின் சிறுநீர் ஒரு அமிர்த நீர்’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி!

Kathiravan V HT Tamil
Jan 21, 2025 01:48 PM IST

நமது தமிழ்நாட்டு சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டு உள்ளதா இல்லையா?, மாட்டு சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமி நாசினி உள்ளது. மியன்மர், ஆப்ரிக்கா நாடுகளும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக புறம்தள்ள முடியாது.

Tamilisai About Cow Urine: ’மாட்டின் சிறுநீர் ஒரு அமிர்த நீர்’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி!
Tamilisai About Cow Urine: ’மாட்டின் சிறுநீர் ஒரு அமிர்த நீர்’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி!

முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் என்ன கொடுக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு நிதி தரக்கூடாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாரத பிரதமர் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார் என கூறினார். 

மாட்டு கோமியத்தில் காய்ச்சலை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோட்டி பேசிய கருத்து குறித்த கேள்விக்கும் தமிழிசை பதில் அளித்தார். அதில், இது ஆயுர்வேதம், ஆராய்ச்சி பூர்வமாக கோமியத்தில் மைரோ ஆர்க்னிசத்தை காப்பாற்றும் சக்தி உள்ளது என கண்டுபிடித்து உள்ளனர். அதனால்தான் வீட்டுக்கு முன் தெளிக்கின்றனர். ஆயுர்வேதத்தில் மாட்டின் சிறுநீர் எனப்படும் கோமியம் மருந்து என்றும் அமிர்த நீர் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

நமது தமிழ்நாட்டு சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டு உள்ளதா இல்லையா?, மாட்டு சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமி நாசினி உள்ளது. மியன்மர், ஆப்ரிக்கா நாடுகளும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக புறம்தள்ள முடியாது. 

80 வகை நோய்களுக்கு இதை பயன்படுத்தலாம் என ஆயுர்வேதம் சொல்கிறது. அவர் சொல்லும் காய்ச்சலில் அந்த நோயும் இருந்து இருக்கலாம். அகில இந்திய அளவில் தலைமை தாங்கும் ஒருவர் சும்மா சொல்வாரா என்பதை இதை கேட்கிறேன். விஞ்ஞான பூர்வமாக மருந்து என்று சொல்லும் போது ஏன் மறுக்கிறீர்கள். கோமியம் என்பது பதப்படுத்துவது, பஞ்சகவ்யம் அமேசானில் உள்ளது என கூறினார். 

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.