சீமான் Vs வருண்குமார்: அவதூறு வழக்கில் மீண்டும் ஆஜராகாத சீமான்! நீதிபதி கண்டனம்!
”சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், அவருக்கு உடல்நலப் பிரச்சினை இருப்பதாக விளக்கம் அளித்தனர். இருப்பினும், தொடர்ந்து ஆஜராகாதது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறிய நீதிபதி, அடுத்த விசாரணைக்கு சீமான் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்”

திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகாததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அவதூறு வழக்கு: சீமான் மீது புகார்
திருச்சி சரக டிஐஜி வருண குமார், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தனது குடும்பம் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றம் எண் 4-ல் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
சீமான் ஆஜராகவில்லை
கடந்த ஏப்ரல் 7 அன்று சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அன்று ஆஜராகாததால் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8 அன்று சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார். இருப்பினும், அடுத்தடுத்த விசாரணைகளுக்கும் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், இன்றைய விசாரணைக்கு சீமான் மீண்டும் ஆஜராகவில்லை.