’வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, பட்டியலினத்தவருக்கு மேலும் 2% இட ஒதுக்கீடு!’ அன்புமணி கோரிக்கை!
“மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்”

’வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு, பட்டியலினத்தவருக்கு மேலும் 2% இட ஒதுக்கீடு!’ அன்புமணி கோரிக்கை!
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி; சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மனமார்ந்த நன்றி
தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.