Tamil News  /  Tamilnadu  /  Controversial Speaker Sivaji Krishnamurthy Was Re-inducted Into The Dmk

Sivaji Krishnamurthy: I am Back! மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

Kathiravan V HT Tamil
Feb 11, 2024 08:14 AM IST

”Sivaji Krishnamurthy: நடிகை குஷ்பு - நடிகர் பிரபு குறித்து சர்ச்சை கருத்தை கூறியதால் கடந்த ஜூனில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டிருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி”

மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சிவாஜி கிருஷ்ண மூர்த்தி
மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சிவாஜி கிருஷ்ண மூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசுகையில், நடிகை குஷ்பு - நடிகர் பிரபு ஆகியோரை ஒப்பிட்டு பேசி இருந்தார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரையும் ஒருமையிலும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொண்டும் விமர்சனம் செய்திருந்தார்.

சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்கில் வைரல் ஆன நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் அத்தனை பேரிடமும் நான் சொல்கிறேன். குஷ்பூவை சீண்டி பார்க்காதீர்கள். ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு உள்ளது. குஷ்பூ பதில் கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது என பேசி இருந்தார்.

இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்த நிலையில், அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதுடன், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் திமுகவின் முரசொலி நாளேட்டில் வெளியாகி உள்ள அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு, கழகத் தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வருகையை, I Am Back என பதிவிட்டு திமுகவினர் சமூகவலைத்தளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர்.

WhatsApp channel