50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 19, 2024 09:47 PM IST

சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!
50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன?

சேலம் மாவட்டம் மேட்டூர் உட்கோட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேட்டூர் அனல் நிலையத்தில் 2 பிளான்ட் கள் ( MTPS-l MTPS-ll) செயல்பட்டு வருகிறது . இதில் MTPS-l -ல் unit - 3 -ல் இன்று மதியம் 4.40 மணிக்கு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, Coal Bunker சரிந்து விழுந்தது. இதில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வேறு யாரேனும் உள்ளே மாட்டி இருக்கிறார்களா என மேட்டூர் அனல் மின் நிலைய நிர்வாகத்தினர் மற்றும் தீயணைத்துறையினர் சம்பவ இடம் வந்து நிலக்கரியை அகற்றிக் வருகின்றனர். இதுவரை கண்டறியப்பட்டவர்கள் விபரம்:

காயம் பட்ட நபர்கள் விவரம்

1.கௌதம்(20)

த/பெ முருகன்

மாதையன்குட்டை

மேட்டூர்

2.திருசெந்தூர்முருகன்(28)

த/பெ ஆண்டவர்

வனவாசி

நங்கவள்ளி 

3.சீனிவாசன்(44)

த/பெ சித்தையன்

மாதையன்குட்டை

மேட்டூர்

4. ஸ்ரீ காந்த்(24)

த/பெ காவேரி

மாதையன்குட்டை

மேட்டூர்

மேலே கூறப்பட்டுள்ள 4 நபர்களும் பகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

படுகாயம் அடைந்தவர் விபரம்

1. மனோஜ்(27)

த/பெ பழனிச்சாமி

பொறையூர்

கோல்நாய்க்கன்பட்டி

மேட்டூர்

படுகாயம் அடைந்துள்ள மனோஜ், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்தவர்கள் விபரம்:

1.வெங்கடேஷ் வயது (50)

தந்தை பெயர்: பெருமாள்

 நாட்டார்மங்கலம், காவேரி கிராஸ், மேட்டூர்

2.பழனிச்சாமி

ஆகியோர் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்வதற்காக அவர்கள் சடலங்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.