Consumer Fraud: ’புது பைக் வாங்க போறீங்களா? உஷார்! விபூதி அடிக்கும் பைக் ஷோரூம்கள்!’ அம்பலமான தில்லுமுல்லு!
யாத்தேஷ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அன்று இருசக்கர வாகனம் வாங்க வந்து உள்ளார். அவர் வாங்கிய இருசக்கர வாகனம் தொடர்ந்து பழுதன நிலையில், இது தொடர்பாக விசாரித்ததில், தனக்கு கொடுக்கப்பட்ட இருசக்கர வாகனம் டெஸ்ட் ட்ரைவுக்காக பயன்படுத்ப்படும் டெமோ பைக் என்பது தெரிய வந்துள்ளது.
நீண்ட நாட்கள் உபயோகித்த டெமோ பைக்கை சர்வீஸ் செய்து வாடிக்கையாளருக்கு புதிதாக விற்றதாக தனியார் பைக் ஷோரூம் மீது புகார் எழுந்து உள்ளது.
சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் தனியார் பைக் ஷோரூம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இளம் வழக்கறிஞரான யாத்தேஷ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அன்று இருசக்கர வாகனம் வாங்க வந்து உள்ளார். அவர் வாங்கிய இருசக்கர வாகனம் தொடர்ந்து பழுதன நிலையில், இது தொடர்பாக விசாரித்ததில், தனக்கு கொடுக்கப்பட்ட இருசக்கர வாகனம் டெஸ்ட் ட்ரைவுக்காக பயன்படுத்ப்படும் டெமோ பைக் என்பது தெரிய வந்துள்ளது.
”டெஸ்ட் ட்ரைவ் வண்டியை தந்து ஏமாற்றிவிட்டனர்”
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யாத்தேஷ், “டிசம்பர் 3ஆம் தேதி பைக் வாங்க வந்தேன். அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 2வி மாடல் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்தேன். எனக்கு இந்த வண்டி பிடித்து உள்ளது. வேறு புதிய வண்டி வேண்டும் என்று கேட்டேன். கஷ்டமர்களுக்கு புது வண்டிதான் தருவோம், டெஸ்ட் ட்ரைவ் வண்டிகளை தருவது இல்லை என ஷோரூமில் தெரிவித்தனர். டிசம்பர் 6ஆம் தேதி அன்று பைக் டெலிவரி எடுத்தேன். அதன் பிறகு நிறைய பழுதுகள் வந்தது.
நான் பைக் வாங்கும் போது டெஸ்ட் ட்ரைவ் வண்டியை எதார்த்தமாக போட்டோ எடுத்து இருந்தேன். அதில் இருந்த சேசஸ் நம்பரும், எனக்கு டெலிவரி கொடுத்த வண்டி நம்பரும் ஒன்றாக உள்ளது. டெஸ்ட் ட்ரைவ் வண்டியை புது வண்டி என்று சொல்லி ஏமாற்றி கொடுத்து உள்ளனர்.
”பணத்தை திருப்பி தர மறுக்கின்றனர்”
இது குறித்து ஷோரூமில் கேட்டால், ‘ரிஜிஸ்டர் ஆகிவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தேன். சி.எஸ்.ஆர். கொடுத்து உள்ளனர். எனது வண்டியை கடந்த டிசம்பர் 11ஆம் தேதியே திருப்பிக் கொடுத்துவிட்டேன். வங்கி கடன் வாங்கி இந்த பைக் வாங்கினேன். மாதம் 13ஆயிரம் ரூபாய் இ.எம்.ஐ கட்டி வருகிறேன். பணத்தை திரும்பி தர சொல்லிக்கேட்டால், இதுவரை பணத்தை திருப்பித் தர மறுக்கின்றனர்.
”நிறுவனத்தின் டீலர் ஷிப்பை ரத்து செய்ய வேண்டும்”
’அட்வக்கெட் என்பதால் இப்படி செய்கிறீர்கள். சாதாரண ஆளாக இருந்தால் இப்படி செய்வீர்களா?’ என்று ஷோரூமில் கூறுகின்றனர். இதுவரை இந்த விவகாரத்தில் காவல்துறை எப்.ஐ.ஆர் போடவில்லை. குன்றத்தூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் டீலர்ஷிப் சர்டிபிக்கெட்டை ரத்து செய்ய சொல்லி புகார் அளித்து உள்ளேன். இதுவரை எந்த தீர்வும் எனக்கு கிடைக்கவில்லை. இதனால்தான் வழக்கறிஞர்கள் எல்லோரும் சேர்ந்து கோரிக்கை வைத்துள்ளோம். எஃப்.ஐ.ஆர். பதிந்து எனக்கு பைக் விற்றவர்களை கைது செய்ய வேண்டும்.” என கூறி உள்ளார்.
டாபிக்ஸ்