Tamil News  /  Tamilnadu  /  Congress Party's Peter Alphonse Asked About The Status Of North Indian Workers Being Sent To Israel

Israel: ‘இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் உ.பி ஏழைகள்!’ ஆபத்தை எச்சரிக்கும் பீட்டர் அல்போனஸ்!

Kathiravan V HT Tamil
Jan 16, 2024 10:15 AM IST

”ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.10000 பதிவு கட்டணமாக வசூலித்து, விமானக் கட்டணத்தையும் அவர்களையே தரச்சொல்கிறது. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு,பணி பாதுகாப்பு, ஊதிய உத்தரவாதம் ஏதும் இல்லாமல் அனுப்புகிறது”

இஸ்ரேல் - வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கோப்புப்படம்
இஸ்ரேல் - வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த டிசம்பர் மாதத்தில் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா அரசு இஸ்ரேலில் வேலை வாய்ப்புக்கான கட்டுமானத் தொழிலாளாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இஸ்ரேல் நாட்டுக்கு குறைந்தது 10,000 தொழிலாளர்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (NSDC) மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்ப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பை செய்ய அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், ”இன்றைய இந்து பத்திரிக்கையின் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது. இஸ்ரேல் நாட்டில் யுத்தம் நடக்கும் பகுதிகளில் உடல் உழைப்பு நிறைந்த வேலைகளை செய்ய ஒன்றிய அரசு உ.பி மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை அனுப்புகிறது. இவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.10000 பதிவு கட்டணமாக வசூலித்து, விமானக் கட்டணத்தையும் அவர்களையே தரச்சொல்கிறது.ஆயுள் காப்பீடு,மருத்துவக் காப்பீடு,பணி பாதுகாப்பு,ஊதிய உத்தரவாதம் ஏதும் இல்லாமல் அனுப்புகிறது. வேலைக்காக தவிக்கும் இளைஞர்களின் பரிதாப நிலையினை ஒரு பணக்கார அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை ஒன்றிய அரசு அனுமதிக்கலமா? வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளுக்கெல்லாம் இந்தியர்களை பணியமர்த்த கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் போது இஸ்ரேலுக்கு மட்டும் ஏன் இந்த விசேக்ஷ சலுகை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பினோய் விஸ்வம் கடிதம் எழுதி உள்ளார். அதில், ”மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான சாதாரண நடவடிக்கைகள் கூட இதில் பின்பற்றப்படுவதில்லை. இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபடுவார்கள், அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூக பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும். ஏற்கனவே, இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள மோதல்கள் உயிர்களைக் கொன்றுள்ளன. இஸ்ரேலில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய குடிமக்களை போர் மண்டலத்திற்கு அனுப்புவது நியாயமானதல்ல" அதில் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்