தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Congress Mla Vijayatharani Will Not Get Caught In Bjp's Trap - Tamil Nadu Congress Committee President Selvaperunthagai

Vijayadharani: ’பாஜக வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார்’ செல்வப்பெருந்தகை சொன்ன பாயிண்ட்!

Kathiravan V HT Tamil
Feb 19, 2024 04:19 PM IST

”காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு ஒரு அதிருப்தியும் இல்லை; கட்சி சட்டமன்ற கொறடாவாக உள்ளார். அவருக்கு காங்கிரஸ் நிறைய செய்துள்ளது, இனியும் செய்ய தயாராக உள்ளது என செல்வப்பெருந்தகை கூறினார்”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை - விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை - விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி

ட்ரெண்டிங் செய்திகள்

வெள்ளம் பாதிக்கப்பட்டது குறித்து ஒரு பைசா கூட பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு அளிக்கவில்லை. துரோகம் செய்யும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு மக்களை புறக்கணிக்கிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.

கேள்வி:- மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பெயர் மாற்றி செயல்படுத்துவதாக பாஜகவினர் கூறுகிறார்களே?

நான் முதல்வன் திட்டத்தை மோடி அரசு அறிவித்ததா?, ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை மோடி அரசு அறிவித்ததா? காலை உணவுத்திட்டம் மோடியின் திட்டமா?; ஏதாவது உண்மைக்கு புறம்பாக பேச வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். பிரதமர் வீடுகட்டும் திட்டம் போன்ற குளறுபடி திட்டம் எங்கும் இல்லை. இந்த திட்டத்தில் 65% மாநில அரசுதான் தருகிறது. ஆனால் அதற்கு பிரதமர் வீடுகட்டும் திட்டம் என பெயர் உள்ளது.

கேள்வி: காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?

அந்த அம்மா வந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர்.  பாஜக புள்ள பிடிக்கும் வேலையை செய்துவருகிறது. திறமையானவர்களை பிடிக்க பாஜக வலைவீசி வருகிறது. அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சிக்கமாட்டார்; அவர் விவரமானவர். உச்சநீதிமன்ற வழக்குக்காக 5 நாட்களாக புதுடெல்லியில் உள்ளார். 

காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு ஒரு அதிருப்தியும் இல்லை; கட்சி சட்டமன்ற கொறடாவாக உள்ளார். அவருக்கு காங்கிரஸ் நிறைய செய்துள்ளது, இனியும் செய்ய தயாராக உள்ளது என செல்வப்பெருந்தகை கூறினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்