Tamil News  /  Tamilnadu  /  Congress Announced Election Committee For Tamil Nadu

மக்களவை தேர்தல்.. கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ்!

Karthikeyan S HT Tamil
Jan 18, 2024 04:23 PM IST

Lok Sabha elections 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணி தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் தலைமையிலான மற்றொரு அணி பாஜக கூட்டணியில் இடம்பெறும் சூழல் உருவாகி உள்ளது.

ஆளும் கட்சியான திமுகவும் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியை பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ் கட்சி. அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். தமிழ்நாடு தேர்தல் பணிக்குழுவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி, ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை , மணிசங்கர் ஐய்யர், மாணிக்கம் தாகூர், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் , திருநாவுக்கரசர் , ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ் , சுதர்சன் நாச்சியப்பன் , செல்லகுமார், கிருஷ்ணசாமி, மோகன்குமாரமங்கலம் உள்பட 31 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, மேலிட தலைவர்களின் பிரசாரம், பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேர்தல் பரப்புரையில் என்ன மாதிரியான கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் இக்குழு விவாதித்து முடிவு எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்