தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Comedy Debate Between Minister Thangam Thannarasu And Sellur Raju Regarding The Setting Up Of A Factory In Madurai In The Tamil Nadu Legislative Assembly

புலி வாலை பிடித்த செல்லூர் ராஜூ! பேரவையில் கலாய்த்துவிட்ட தங்கம் தென்னரசு!

Kathiravan V HT Tamil
Mar 31, 2023 11:16 AM IST

மதுரையில் எல்லோரும் மாடுதான் பிடிப்பார்கள், செல்லூர் ராஜூ அண்ணன் புலி வாலையே பிடித்து வந்து நின்னார் - தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

புலி வாலை பிடித்துள்ள செல்லூர் ராஜூ - அமைச்சர் தங்கம் தென்னரசு
புலி வாலை பிடித்துள்ள செல்லூர் ராஜூ - அமைச்சர் தங்கம் தென்னரசு

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு தொழிற்சாலை கூட குறிப்பிட்ட அளவுக்கு இல்லை, மதுரைக்கு ஏதாவது ஒரு தொழில் வேண்டும். எல்லோரும் பாராட்டும் அளவுக்கு தொழில்துறை அமைச்சர் கொண்டு வர வேண்டும். மதுரை எல்லாம் ஆஹா ஓஹோ என்று நம்முடைய தென்னரசு அவர்களை பாராட்ட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன் என பேசினார்.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு ‘10 வருசம் அமைச்சரா இருந்து இருகீங்க ஒன்னும் இல்லைனு வருத்தப்படுகிறீங்க இந்த அமைச்சராவது தருவாராண்ணு பார்ப்போம்’ என்றார்

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்த தொழில் துறை முதலீட்டு ஊக்குவிக்குப்பு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், உள்ளபடியே மதுரை மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என சொல்லிட்டு இருக்காங்க!. (பேரவையில் சிரிப்பலை)

நானே அசந்துபோனேன்! கொஞ்ச நாளுக்கு முன்னாள் ஒரு படம் ஒன்று வந்தது. அண்ணன் என்ன பண்ணாரு நாமெல்லாம் புலியை பார்த்தால் தூர ஓடிப்போவோம். மதுரையில் எல்லோரும் மாடுதான் பிடிப்பார்கள், செல்லூர் ராஜூ அண்ணன் புலி வாலையே பிடித்து வந்து நின்னார்.

ஆனால் ஒன்னு மதுரைக்காரங்க ரொம்ப விவரமானவங்க! புலி வாய் இருக்கும் பக்கமா நிக்காமல் புலி வால் இருக்குற பக்கமா பாத்து அண்ணன் பிடித்து இருந்தார்.

அவ்வுளவு திறமையாக இருக்க கூடிய அண்ணன் அவர்கள் நம் மதுரைக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆர்வம் காட்டக்கூடிய காரணத்தால் 1000 கோடியில் மதுரைக்கு டைடல் பார்க்கும் சிப்காட்டும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.  

மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை செம்மைப்படுத்தி வரிசையாக நம் தென் மாவட்டங்களில் தொழில்கள் வர வேண்டும். மற்ற இடங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சி எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்கள். தற்போது அதிக முதலீடுகள் தென்மாவட்டங்களை நோக்கி வரத் தொடங்கி உள்ளது. மதுரையும் நிச்சயமாக அத்தகைய முதலீடுகளை பெறும்.

IPL_Entry_Point