கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
”வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை அறிவித்துள்ளார்”

கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை தாலுக்காவில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தெரிவிக்கப்பட்டு, பள்ளிகள் இன்று இயங்காது என உறுதி செய்யப்பட்டுள்ளது. கனமழையின் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.