தரமற்ற கட்டுமான பொருட்கள்- மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு
கல்குறிச்சி அரசு பள்ளியில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சமுக வலைதளங்களில் கிராம மக்கள் பதிவிட்டு இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆங்கில வழி கல்வியும் அப்பள்ளியில் உண்டு. எனவே மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளன. இட நெருக்கடி இருப்பதால் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் காரணமாக மானாமதுரை திமுக எம் எல் ஏ. தமிழரசியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
19 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கற்கள், சிமெண்ட். எம் சாண்ட் உள்ளிட்டவைகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும் செங்கற்கள் சாதாரணமாக உதிர்வதாகவும், தண்ணீர் பட்ட உடன் கரைவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
