Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிந்த அலுவலர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் நேரில் ஆஜராகி, அந்த ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், எதிர்தரப்பில் 2 சாட்சிகளை விசாரணை செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை பொறுத்தவரை, அரசு சாட்சியம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் அரசு தரப்பு சாட்சியம் மூலம் கேள்வி விசாரணை நடத்தப்பட்டது. இரு விசாரணையும் நடந்துமுடிந்த நிலையில் தற்போது இவ்வழக்கு இறுதிகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் வீடியோ கால் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்றைய தினத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கவே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.