தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 07, 2024 05:58 PM IST

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமின் கேட்ட மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் கோப்பு படம்
சவுக்கு சங்கர் கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சவுக்கு சங்கர் மீது தாக்குதல்

இதையடுத்து தேனியில் வைத்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலர்கள் சவுக்கு சங்கரை தாக்கியதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அளித்தார். அப்போது, "சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் என இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லை. கை கால் நன்றாக இருந்தது. சிசிடிவி காட்சியிலும் இது தெரியும்.

தற்போது அவரது கைகள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலில் தடிப்பு தடிப்பாக ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன.

சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார்.

கை உடைந்து விடக்கூடாது என பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடித்துள்ளனர். ஆனாலும், அடி பலமாக விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயின்மெண்ட் போட்டு, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். வலி நிவாரணி அதிகம் கொடுத்தால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வழக்கறிஞர்கள் குழுவினர் சங்கரை சந்திக்காமல் இருந்திருந்தால் அவர் வழுக்கி விழுந்ததாகவோ அல்லது வேறு விதமாகவோ சிறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருப்பார்கள்" என்றார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கோவை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இந்த மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, "இந்த புகார் தொடர்பாக விசாரிக்க சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு கோவை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே போலீசார் சார்பில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவை விசாரித்த வரும் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்