Madurai AIIMS: ’கோவை நூலகம்! மதுரை எய்ம்ஸ் மாதிரி செய்ய மாட்டோம்!’ வானதியை கலாய்த முதல்வர்
”வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்த நூலகம் திறக்கப்படும். அந்த நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நிச்சயமாக அழைப்பு வரும்”

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும், 20ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.
நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இறுதி நாளான இன்று உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதற்கு வாழ்த்துகள். பாஜகவை சேர்ந்த திருமதி வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கையில், கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமைய போகிறது, எப்போது முடிப்பீர்கள், எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளீர்கள் என கேள்வி கேட்டார்.
