Coimbatore: 'சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை வெளியிடும் முன் சரி பார்ப்பது முக்கியம்' கோவை ஆட்சியர்
வழக்கமான காட்சி, பத்திரிகை ஊடகங்களுக்கு செய்திகளை குறித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சமூக வலைதள கருத்துருவகாக்கம் செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு செய்தியை பகிர்வும்பொழுது அதன் உண்மை தன்மையையும் அதன் பின்னணியையும் முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம்

சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும், சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்தால் அதை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டு சொல்வது அவசியம் என சமூக வலைதள கருத்துருவாக்கம் செய்யும் நபர்களுடனான கலந்துரையாடலின் போது அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இப்போதைய சூழலில் சமூக வலைதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலை தளங்களில் மிகவும் உற்சாகமாக வீடியோக்களை வெளியிட்டு பிரப்லங்களாகி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வதந்திகளை தடுக்கும் நோக்கத்தில் கலைந்துறையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று சமுக வலைதள கருத்துருவாக்கம்( SOCIAL MEDIA INFLUECER ) செய்யும் நபர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம்,பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுப்பது எப்படி என பல தகவல்கள் பரிமாறப்பட்டன.
முதலில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேலும் சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும், சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்தால் அதை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டு சொல்வது அவசியம் எனவும் , சரி பார்த்துகொள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இதனைதொடர்ந்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,
வழக்கமான காட்சி, பத்திரிகை ஊடகங்களுக்கு செய்திகளை குறித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சமூக வலைதள கருத்துருவகாக்கம் செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு செய்தியை பகிர்வும்பொழுது அதன் உண்மை தன்மையையும் அதன் பின்னணியையும் முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம். தவறான தகவல்களை பகிர்ந்தால் அதற்கு அவர்களும் பொறுப்பு என்பதை உணர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்தார். செய்தி தொடர்பு துறையின் மூலமோ அல்லது அதிகாரிகளிடமோ தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது எனவும் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஏராளமான இளைஞர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில், போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை tag செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்த நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் சமூக வலைதள கருத்துருவாக்கம் செய்யும் நபர்களுடனான கலந்துரையாடலின் போது அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

டாபிக்ஸ்