Tamil News  /  Tamilnadu  /  Coimbatore Collector Sameeran Inaugrated Mobile Food Safety Check Vehicle
நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அறிமுகப்படுத்திய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்
நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அறிமுகப்படுத்திய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

FSSAI Mobile Vehicle: உணவு கலப்படம்…பகுப்பாய்வு வாகனம் கோவையில் அறிமுகம்

30 January 2023, 16:42 ISTMuthu Vinayagam Kosalairaman
30 January 2023, 16:42 IST

உணவு கலப்படம் குறித்த கண்டறிவதற்கு நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கோவையில் இன்று தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அமைந்திருக்கும் உணவகங்களில் மீது சாப்பாடு தரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருவது அதிகமாகியுள்ளது. இதை தடுப்பதற்கு உணவு பாதுகாப்பு துறையில் பல்வேறு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உணவகங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்த வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த வாகனம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் தமிழ்செல்வன் உள்பட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தில் 30 வகையா உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறியும் வசதிகளும், கலப்படம் குறித்த விளக்க படங்களும் இடம்பிடித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்படும் செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்களிடம் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் குறித்து புகார் அளிப்பதற்காக பிரத்யேகமாக 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது.