தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Cmrl Jobs Notification For Various Postions, Know More Details Here

CMRL Jobs: டிகிரி இருந்தால் போதும்! சென்னை மெட்ரோவில் வேலை - அதிகபட்ச சம்பளம் ரூ. 2.25 லட்சம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 24, 2024 12:40 PM IST

டிகிரி இருந்தால் போதும் சென்னை மெட்ரோ ரயில் ரயில் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பணிகளில் தகுதியான நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பவம் ரூ. 62 ஆயிரம் முதல் ரூ.2.25 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பிஇ, பிடெக், பட்டதாரி படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோவில் இருக்கும் காலி பணியிடங்கள்

GM – 02

AGM – 01

JGM – 01

DGM – 03

MGR – 05

DM / AM – 03

Line Supervisor / Crew Controller – 01

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு முழு விவரம் இதோ

GM – 45 வயது முதல் 55 வயது வரை

AGM – அதிகபட்சம் 47 வயது

JGM – அதிகபட்சம் 43 வயது

DGM – அதிகபட்சம் 40 வயது

MGR – அதிகபட்சம் 38 வயது

DM / AM – அதிகபட்சம் 35 / 30 வயது

Line Supervisor / Crew Controller – அறிவிப்பில் காணவும்

கல்வி தகுதி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஏஐசிடிஇ அல்லது யுஜிசி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.62 ஆயிரம் முதல் ரூ.2.25 லட்சம் வரை கிடைக்கும்

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

மேற்கூறப்பட்டிருக்கும் அனைத்து பணிகளுக்குமான விண்ணப்ப கட்டணம் விவரம் பின்வருமாறு

SC / ST – ரூ.50

மற்ற நபர்கள் – ரூ.300

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வரும் மார்ச் 24ஆம் தேதிக்குள் (24.03.2024) https://careers.chennaimetrorail.org/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் சென்னை மெட்ரோ இணையத்தளத்தில் தங்களது சுயவிவரத்தை பதிவு செய்து கொண்டு அதன் மூலம் உள்நுழைய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்