MK Stalin: தீரன் சின்னமலை நினைவு நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு நாள் இன்று. இதையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், " சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்." என்று தீரன் சின்னமலை நினைவை போற்றும் விதமாக பதிவை பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் பொன்முடி, வி.கே. சேகர் பாபு, சாமிநாதன், சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்பட பலரும் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்