தவெக 2ஆம் ஆண்டு விழா: ’விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலினே ரசிகர்தான்!’ அரங்கை அதிரவிட்ட ஆதவ் அர்ஜூனா!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக 2ஆம் ஆண்டு விழா: ’விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலினே ரசிகர்தான்!’ அரங்கை அதிரவிட்ட ஆதவ் அர்ஜூனா!

தவெக 2ஆம் ஆண்டு விழா: ’விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலினே ரசிகர்தான்!’ அரங்கை அதிரவிட்ட ஆதவ் அர்ஜூனா!

Kathiravan V HT Tamil
Published Feb 26, 2025 12:19 PM IST

என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறார்கள். அவர் சொன்னார் ‘எனக்கு ஒரே கமிட்மண்ட் உள்ளது. அது முடிந்த உடன் என் வாழ்கை முழுவதும் மக்களுக்காக’ என சொல்லிவிட்டார். ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடிக்கிறீர்கள்.

தவெக 2ஆம் ஆண்டு விழா: ’விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலினே ரசிகர்தான்!’ அரங்கை அதிரவிட்ட ஆதவ் அர்ஜூனா!
தவெக 2ஆம் ஆண்டு விழா: ’விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலினே ரசிகர்தான்!’ அரங்கை அதிரவிட்ட ஆதவ் அர்ஜூனா!

தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேச்சு:-

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், சமூகசீர்த்திருத்தவாதி அஞ்சலையம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களில் கொள்கைகளுக்கும் தியாகங்களுக்கும் என் முதற்கண் வணக்கம். 

பிறப்பால் ஒரு தலைவர் உருவாக கூடாது. மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் சூழந்தபோது தலைவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உங்களின் இடம், உங்களின் கொள்கை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து துவங்குங்கள் என்று சொன்னார். 

சிறு வயதில் அம்பேத்கர், பெரியாரின் கொள்கை வழியில் இணைக்கப்பட்டவன் நான். அந்த கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்த அனுபவம் உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் சமூக சீர்த்திருத்தத்தை பேசிய 70 வருட அரசியல், எப்போதும் புரட்சியாளர் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது கிடையாது. இருபெரும் தலைவர்கள், ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆளுமையை தமிழ்நாட்டில் தன்னுடைய தியாகத்தை செய்தவர்களை கொள்கை தலைவர்களாக நியமித்து உள்ளனர். 

தவெகவில் இணைந்தது ஏன்?

சினிமாவில் உச்சபச்சமாக பொருள் ஈட்டக் கூடிய பொறுப்பை துறந்து உள்ளார் விஜய். அவரோடு பேசும் போது கொள்கை ரீதியில் எப்படி உள்வாங்கி உள்ளார் என்பதை அறிய முடிகிறது. அந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.  பெரியாரிசம் பேசுவார்கள், சமூகசீர்த்திருத்தம் பேசுவார்கள் ஆனால் சாதி அரசியலை பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாக ஆட்சிக் கொள்கையாக உருவாக்குவார்கள். பெரியாரையும், சமூகசீர்த்திருத்தையும் முன்னிறுத்தி தமிழக அரசியல் ஊழல் வாதிகள் கைகளில் உள்ளது. 

அண்ணா, அம்பேத்கர் நினைவுகள் நிறைவேறவில்லை 

பெரியாரையும், அம்பேத்கரையும் இணைத்து சமூகசீர்த்திருத்ததை உருவாக்க கூடிய இயக்கமாக பரிநமித்துக் கொண்டு இருக்கிறது. 1925ஆம் ஆண்டு திராவிட இயக்க சித்தாந்தங்கள் நீதிக்கட்சி மூலம் உருவாக்கப்பட்டது. தந்தை பெரியார் மூலம் அந்த கொள்கைகள் சேர்க்கப்பட்டது. அண்ணா உருவாக்கிய எல்லோரும் சமம் என்ற அரசியல் 1949-ல் உருவாக்கப்பட்ட நூறு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அண்ணா, அம்பேதக்ரின் கனவுகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

தேர்தலில் வெற்றி பெற்று ஊழல் செய்து 30 வருடங்களுக்கு முன்பு எந்த பொருளாதார வலிமையும் இல்லாதவர்கள் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். சினிமா துறையில் பல தொழில்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.  இதற்கு ஒரே மாற்று தமிழக வெற்றிக் கழகம். இதற்கு ஒரே மாற்றான தலைவர் நம்முடைய தலைவர் விஜய் அவர்கள். 

கடனில் தவிக்கும் தமிழகம்! 

தொலைக்காட்சி விவாதங்களில் ’அவர் நடிகர், அவருக்கு கொள்கை தெரியுமா?’ என பேசுகிறார்கள். 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் இதுவரை என்ன மாற்றத்தை உருவாக்கி உள்ளார்கள்.  2021இல் திமுக பிரச்சாரம் செய்தபோது, தமிழ்நாடு கடனில் உள்ளது என சொன்னது. ஆனால் திமுக வந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது.  மக்களிடம் கவர்ச்சியை ஏற்படுத்தி, கவர்ச்சி மூலம் ஆட்சியை ஏற்படுத்தி, ஆட்சி மூலம் ஊழலை செய்து கொண்டிருக்கும் அரசாங்கம்தான் இருந்து கொண்டு இருக்கிறது. 

மேம்பட்ட நாடுகளில் வளர்ச்சி உருவாக்கப்பட்டு அதில் ஊழல் இருக்கும். இங்கே கடனை உருவாகி அதில் ஊழல் செய்கிறார்கள். நம்முடைய தலைகளில் 9 லட்சம் கோடி கடன் உள்ளது. இது எல்லாமே மீடியா செட்டிங், செட்டிங் செய்வதை தவிர எதுவும் தெரியாது. 

முதல்வரும் ரசிகர்தான் 

என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறார்கள். அவர் சொன்னார் ‘எனக்கு ஒரே கமிட்மண்ட் உள்ளது. அது முடிந்த உடன் என் வாழ்கை முழுவதும் மக்களுக்காக’ என சொல்லிவிட்டார். ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடிக்கிறீர்கள். அதுவும், அவர் போடும் பேண்ட், சட்டையை மாற்றி நடித்தால் கூட பரவாயில்லை. இதில் இருந்து ஒன்று பதிவாகிறது. உங்களுக்கு முதல்வரும் ரசிகர்தான். 

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.