TOP 10 NEWS: ’மனநலம் பாதித்த மாணவிக்கு வன்கொடுமை! கேரளா செல்லும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’மனநலம் பாதித்த மாணவிக்கு வன்கொடுமை! கேரளா செல்லும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’மனநலம் பாதித்த மாணவிக்கு வன்கொடுமை! கேரளா செல்லும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 08, 2024 07:20 PM IST

TOP 10 NEWS: கேரளா செல்லும் முதலமைச்சர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஈபிஎஸ் உள்ளிட்டோர் கண்டனம், காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி, தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’மனநலம் பாதித்த மாணவிக்கு வன்கொடுமை! கேரளா செல்லும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’மனநலம் பாதித்த மாணவிக்கு வன்கொடுமை! கேரளா செல்லும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

2.பாலியல் வன்கொடுமைக்கு ஈபிஎஸ் கண்டனம்

மனநலம் குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. திமுக அரசின் காவல்துறை வழக்கம் போல அலட்சிய போக்குடன் இருந்து உள்ளது. கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை. 

3.பாலியல் வன்கொடுமை - பிரேமலதா கண்டனம்

மனநலம் பாதித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களை நாடு மன்னிக்காது. மாணவியை வன்கொடுமை செய்தவர்களுக்கு போக்சோ தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து. 

4.காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி

சென்னையில் மனநலம் பாதித்த மாணவியை 7 பேர் பல மாதங்களாக வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது. பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு யார் கொடுத்தது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி. 

5.தமிழகம் சமூகநீதியின் மண் 

தமிழகம் சமூகநீதியின் மண்ணாக உள்ளது. குலத் தொழில் திட்டத்தை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. 

6.தமிழக மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் 

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

7.தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடலோர உள் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வரும் 10ஆம் தேதி கனமழையும், இன்றும் நாளையும் மிதமான மழையும் பெய்யும் என அறிவிப்பு.

8.விஜய்க்கு அன்பில் மகேஸ் பதில் 

களத்தில் யார் வேலை பார்க்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். சமூகவலைத்தளத்தில் பணியாற்றாமல் களத்தில் பணியாற்றினால் மக்கள் பிரச்னை தெரியும். புயல் பாதிப்பின் போது 2500 கிலோ மீட்டர் சென்று துணை முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். போட்டோ எடுத்து விளம்பரம் தேடுவதாக தவெக தலைவர் விஜய் கூறிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில். 

9.ஆட்சிக்கு வரவே விரும்புகிறோம் - திருமா

எந்த கட்சியுமே ஆட்சிக்கு வர விரும்பும். விசிகவும் அதைத்தான் விரும்புகிறது. அதே நேரம் கூட்டணியில் இருந்தவாறு முரணாக பேசுவது நாகரீகம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி. 

10.மதுரை எய்ம்ஸ் திறப்பு எப்போது?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும். முதற்கட்டமாக ஆயிரத்து 118.35 கோடி ரூபாயில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதில். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.