இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!
கன்னியாகுமரி: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் (58) . இவருக்கு ஜெசி என்ற மனைவியும், ஆன்சி தீனா (27) என்ற மகளும், ஆலன் பீட்டர் (25) என்ற மகனும் உள்ளனர். பீட்டர் குழித்துறையில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்து உள்ளார்.
இவர் தினமும் காலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று ( ஜூன் 2) ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்று இருந்தார். அப்போது அங்கு மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதாகும் மனோ , மதிலகத்தை சேர்ந்த மாணவன் அகிலேஷ் ஆகியோர் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு தடுப்பணை வழியாக நடந்து சென்றனர்.அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் வழுக்கி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்தனர்.