NTK VS TPDK: ஈரோடு கிழக்கில் தபெதிக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்! தபெதிகவினருக்கு சிகிச்சை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ntk Vs Tpdk: ஈரோடு கிழக்கில் தபெதிக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்! தபெதிகவினருக்கு சிகிச்சை!

NTK VS TPDK: ஈரோடு கிழக்கில் தபெதிக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்! தபெதிகவினருக்கு சிகிச்சை!

Kathiravan V HT Tamil
Feb 02, 2025 03:45 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோட்டிற்கு பெரியார் செய்த நற்பணிகள் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

NTK VS TPDK: ஈரோடு கிழக்கில் தபெதிக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்! தபெதிகவினருக்கு சிகிச்சை!
NTK VS TPDK: ஈரோடு கிழக்கில் தபெதிக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்! தபெதிகவினருக்கு சிகிச்சை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கு பெரியார் இயக்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான் ’பெரியாரின் வெங்காயமா? பிரபாகரனின் வெடிகுண்டா?’ என பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தபெதிக - நாதக இடையே மோதல் 

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோட்டிற்கு பெரியார் செய்த நற்பணிகள் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

கு.ராமகிருஷ்ணன் பேட்டி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்து வருகிறோம். ஈரோட்டில் உள்ள தேவாலயம் பகுதியில் பல்வேறு கட்சிகள் துண்டறிக்கை தந்து பிரச்சாரம் செய்கின்றனர். தபெதிகவினரை நாம் தமிழர் கட்சியின் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது திட்டமிட்டு செய்த தாக்குதல். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் அவர்கள் ஈரோட்டில் வன்முறை தூண்டும் வகையில் வெறித்தனமாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டை வீசுவோம் என வெளிப்படையாக பேசிய விளைவே கலவரத்தை தூண்டி உள்ளது. இதனை கண்டு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது. வெடிகுண்டு வீசுவோம் என்று பேசியபோதே தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முடியாது என்பதால் விரக்தி நிலையில் சீமான் பேசி வருகிறா. நாம் தமிழர் கட்சியினர் தேர்தலை அமைதியாக நடத்தவிடுவார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எங்கள் தோழர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். தாக்கப்பட்ட தோழர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் மீது காவல்துறையில் புகார் மனு அளித்து உள்ளோம். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.