தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister Stalin Paid Homage To Periyar Statue

Periyar: 'பகுத்தறிவு பாதையில் நடைபோடச்செய்த பெரியாரின் புகழைப்போற்றுவோம்’- முதலமைச்சர் ஸ்டாலின்

Marimuthu M HT Tamil
Dec 24, 2023 12:14 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின், பெரியாரின் திருவுருச்சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

ட்ரெண்டிங் செய்திகள்

பகுத்தறிவுப் பகலவன் என்றும்; தந்தை பெரியார் என்றும் அழைக்கப்படும் சீர்திருத்தவாதி ஈ.வே.ராமசாமியின் 50ஆம் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 
சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்களான துரைமுருகன், உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்.

“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்' எனத் தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்