தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister Stalin Congratulated Vck Leader Thirumavalavan On His Birthday

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர்!

Divya Sekar HT Tamil
Aug 17, 2022 10:07 AM IST

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “திருமாவளவனின் 50 வயதில் கலைஞர் வாழ்த்தினார். இன்று 60 வயதில் நான் வாழ்த்துகிறேன். திருமாவளவனுக்கு இன்னும் பல கடமைகள் உள்ளதால் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் . சட்டக் கல்லூரி மாணவராக திமுகவில் சிறப்பாக செயல்பட்டார் .

 அன்று திமுகவிலிருந்து செயல்பட்டார் ; இன்று கூட்டணிக்குள் இருந்து செயல்படுகிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் வேண்டாம் . இது தேர்தல் நடப்பு அல்ல; கொள்கை கூட்டணி. வெற்றிக்குப் பிறகும் ஒரு தாய் பிள்ளையாக இருக்கிறோம்”என்றார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்