ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், குளிர்சாதன (AC) பெட்டிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம் எனவும் ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலமாக வேலூர் சென்றார். அப்போது ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைய பதிவிட்டுள்ளார்.