Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..இந்த மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யுமாம் - வானிலை அப்டேட் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..இந்த மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யுமாம் - வானிலை அப்டேட் இதோ!

Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..இந்த மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யுமாம் - வானிலை அப்டேட் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 10, 2024 07:50 AM IST

TN Weather Update: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை அப்டேட்
மழை அப்டேட்

கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

11.04.2024: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

12.04.2024 மற்றும் 13,04.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.04.2024 மற்றும் 15.04.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த நான்கு தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

10.04.2024 முதல் 13.04.2024 வரை அடுத்த 4 தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38-41° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34'-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

10.04.2024 மற்றும் 11.04.2024: அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2'-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

10.04.2024 முதல் 11.04.2024 வரை: அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கோடையை இதமாக்கும் டாப் 10 டிப்ஸ் இதோ..!

  • வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் பருகி வர உடல் உஷ்ணம் தணியும்
  • தண்ணீரில் வெட்டி வேரை நறுக்கி போட்டு ஊறியதும் குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் இருக்காது
  • வெங்காயத்தை நறுக்கி, பசு நெய்யில் வதக்கி, காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூட்டால் ஏற்படும் மூல நோய் குணமாகும்
  • வியர்வை நாற்றத்தால் அவதிப்படுவோர் தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குளிக்கலாம்
  • மோரில் பச்சை மிளகாய்க்கு மாற்றாக சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால், சுவை தூக்கலாகும், உடலுக்கும் நல்லது
  • கோடை காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலக்கி குடிக்கலாம்
  • கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க வெள்ளரிக்காய் சாற்றுடன், பீட்ரூட் சாறு சேர்த்து பருகலாம்
  • பானை தண்ணீரில் கைப்பிடி அளவு நன்னாரி வேரை போட்டு வைத்தால் சுவையுடன் குளிர்ச்சி தரும்
  • கோடை காலத்தில் நன்னாரி சர்பத் குடிக்கலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: