Weather Update: சென்னையில் நாளை பனிமூட்ட எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தந்த அலார்ட்!
Weather Update: நாளை (15-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை காலை லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
14-02-2025 மற்றும் 15-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
16-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
17-02-2025 முதல் 20-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (14-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (15-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு ஏதுமில்லை. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக கரூர் பரமத்தியில் 16.0 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 8.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. வெப்பநிலை பதிவாகி உள்ளது. திருப்பத்தூர், கரூர், குன்னூர், வேலூர் பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளது.

டாபிக்ஸ்