Heavy rain: நீலகிரி முதல் குமரி வரை! 17 மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! கனமழை எச்சரிக்கை விடுப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Heavy Rain: நீலகிரி முதல் குமரி வரை! 17 மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! கனமழை எச்சரிக்கை விடுப்பு!

Heavy rain: நீலகிரி முதல் குமரி வரை! 17 மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! கனமழை எச்சரிக்கை விடுப்பு!

Kathiravan V HT Tamil
Published Apr 04, 2025 05:03 PM IST

Heavy rain warning: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை மற்றும் வெப்பநிலை மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Heavy rain warning: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! கனமழை எச்சரிக்கை விடுப்பு!
Heavy rain warning: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! கனமழை எச்சரிக்கை விடுப்பு!

கீழடுக்கு சுழற்சி

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை மற்றும் வெப்பநிலை மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

மழை முன்னறிவிப்பு:

03-04-2025 (இன்று): தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

04-04-2025 (நாளை): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

05-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

06-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07-04-2025 முதல் 09-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

வெப்பநிலை முன்னறிவிப்பு:

03-04-2025 முதல் 05-04-2025 வரை: தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறையலாம். வட உள் தமிழகத்தில் சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் உயரலாம். பொதுவாக இயல்பை ஒட்டி அல்லது சற்று குறைவாக இருக்கும்.

06-04-2025 மற்றும் 07-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரலாம். ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை:

03-04-2025 (இன்று): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ்.

04-04-2025 (நாளை): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27-28 டிகிரி செல்சியஸ்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தற்போது மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.