தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chennai Metro Rail To Run On Sunday Time Table During Pongal Holiday

Pongal 2024: பொங்கல் விடுமுறை.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

Karthikeyan S HT Tamil
Jan 12, 2024 03:42 PM IST

Chennai Metro Train: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்.
சென்னை மெட்ரோ ரயில்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகை நாட்களில், சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2024 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், ஞாயிறு அட்டவணைப்படி ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்