Weather Update : எச்சரிக்கை.. வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும்.. புதிய உச்சத்தை தொடப்போகுதாம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்காலம், குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கோடையின் ஆரம்பமே உக்கிரமாக இருக்கிறது. மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெயில் பதிவாகியிருந்த நிலையில், இன்று வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் உச்சத்தை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். சென்னையில் கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த ஆண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்று முதல் 14.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
09.03.2024 முதல் 10.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் வறண்ட வானிலேயே நிலவி உள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் மார்ச் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்றும், இன்று முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக பொதுமக்கள் அசௌகரியமான நிலையை உணர வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து தமிழக மாவட்டங்களை ஒட்டிய கடல் பகுதிகளில் எந்த விதமான ஆபத்து எச்சரிக்கை அறிவிப்புகளும் இல்லை என்பதால், மீனவர்கள் எவ்வித தடையும் இன்றி மீன் பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்