’நீலகிரிக்கு ரெட் அலார்ட்! 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’நீலகிரிக்கு ரெட் அலார்ட்! 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

’நீலகிரிக்கு ரெட் அலார்ட்! 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Published Jun 14, 2025 02:53 PM IST

”நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”

’நீலகிரிக்கு ரெட் அலார்! 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
’நீலகிரிக்கு ரெட் அலார்! 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரிக்கு ரெட் அலார்ட்

நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.