’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

Kathiravan V HT Tamil
Published May 17, 2025 05:12 PM IST

”வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை”

’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை மற்றும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், சில பகுதிகளில் சாலைகள் வழுக்குதல், போக்குவரத்து பாதிப்பு மற்றும் சிறிய அளவிலான பொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடி மின்னல் உடன் கூடிய லேசான மழை

திருவள்ளூர், சென்னை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையுடன் இடி மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சில பகுதிகளில் சாலைகள் வழுக்குதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம்.