’மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

’மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Updated May 18, 2025 12:31 PM IST

அதேபோல், பிற்பகல் 1:00 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

’மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
’மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை மையத்தின் அறிக்கையின்படி, பிற்பகல் 1:00 மணி வரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி உடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தாக்கமாக, இப்பகுதிகளில் சாலைகள் நழுவுதல், சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படலாம்.

லேசான மழைக்கான வாய்ப்பு

அதேபோல், பிற்பகல் 1:00 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருக்கெடுத்த தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், தாராசுரம், பட்டீஸ்வரம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் காட்டாற்று வெள்ளம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஜவ்வாது மலை பகுதியில் கனமழை பெய்ததால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம் மற்றும் செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர் வரத்து தொடங்கியது. வந்தவாசியில் மூன்று மணி நேரம் பெய்த மழையால் ஆரணி சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது, கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

விழுப்புரத்தில் நெல் மூட்டைகள் சேதம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கட்டளை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரி, சேலத்தில் தொடரும் மழை

கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மழை பெய்து வருகிறது, இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர், ஓமலூர் பகுதிகளில் கனமழை பெய்தது. மேட்டூரில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், பல இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

பிற மாவட்டங்களில் மழையால் நிம்மதி

திருவாரூர், சிதம்பரம், மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்றும் மழை தொடரும்

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.