தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chennai Mayor Priya's Car Accident

Mayor Priya's car accident: சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்து!

Kathiravan V HT Tamil
Feb 23, 2024 08:48 PM IST

”சென்னை மேயர் பிரியா, சென்னை மேயர், திமுக, சென்னை மேயர் பிரியா கார் விபத்து, சாலை விபத்து”

சென்னை மேயர் பிரியா கார் விபத்து
சென்னை மேயர் பிரியா கார் விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

சொந்த வேலைக்கு சென்று சென்னை திரும்பி கொண்டிருந்த மேயர் பிரியாவின் கார் ஆனது பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம் பகுதியில் உள்ள சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. 

சென்னீர் குப்பம் மேம்பாலம் அருகே மேயர் பிரியாவின் காருக்கு முன்னே சென்ற கார் திடீரென நிறுத்திய போது மேயர் பிரியாவின் கார் முன்னே சென்று போதியது. பின்னர் மேயர் பிரியாவின் காருக்கு பின்னால் வந்த லாரி மேயர் பிரியாவின் காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து மேயரை பாதுகாப்பாக வேறு வாகனத்தில் போலீசார் அனுப்பி வைத்தனர். மேயர் பிரியா காயம் இன்றி உயிர்தப்பினார். அவரது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

சென்னை-பெங்களூருவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையிலேயே விளக்குகள் இல்லாததுதான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. 

இனி சாலை விபத்துகள் ஏதும் நிகழாமல் இருக்க போக்குவரது நெரிசல் மிகுந்த முக்கிய சாலையான சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் முறையாக தெருவிளக்குகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்