திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி தருவது எப்படி? போலீஸ்க்கு எதிராக பாமக முறையீடு! அவசர வழக்காக நாளை விசாரணை!
மாநகர காவல் சட்ட விதிகளை பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து நீதிபதி வேல்முருகன் அமர்வில் பாமக வழக்கறிஞர் பாலு முறையீடு செய்தார். இதனை பரிசீலனை செய்த நீதிபதி அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநரை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை உடனடியாக அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக பாமக் வழக்கறிஞர் பாலு தொடர்ந்த மனுவை நாளை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
மாநகர காவல் சட்ட விதிகளை பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து நீதிபதி வேல்முருகன் அமர்வில் பாமக வழக்கறிஞர் பாலு முறையீடு செய்தார். இதனை பரிசீலனை செய்த நீதிபதி அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்தது. காவல்துறை அனுமதி தராத நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டட்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற அக்கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட பாமகவின் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். மேலும் நேற்றைய தினம் போராட்டம் நடத்த முயன்ற அதிமுக மாணவரணியினரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை காவல்துறை தரப்பில் தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் உரையை வாசிக்கமால் புறக்கணித்து சென்ற ஆளுநரை கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று திமுக அறிவித்து இருந்தது. காவல்துறையின் அனுமதியுடன் சென்னையில் போராட்டமும் நடைபெற்றது. இந்த விவகாரம் சென்னை காவல்துறையின் செயல்பாடுகள் மீது விமர்சனம் ஏற்படுத்துவதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
அறப்போர் இயக்கமும் குற்றச்சாட்டு
அதானி மின்சார வாரியங்களில் செய்த ஊழல்கள் மீது மத்திய மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அறப்போர் இயக்கம் திட்டமிட்டு இருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.
இந்த நிலையில் திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ட்வீட் செய்து உள்ளார். அதில், ”ஆணையர் அருண் திமுகவை சும்மா விட மாட்டார். எந்த ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் காவல்துறை விதிகள் படி 5 நாட்கள் முன்பு அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும். ஒரு மாதம் முன்பாக அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த நமக்கே அவர் அனுமதி தரவில்லை. அனுமதி வாங்காமல் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தால் அனைவரின் மீதும் அருண் IPS FIR பதிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலினை நாளை கைது செய்வார். அப்படி எதுவும் செய்யாமல் திமுகவிற்கு மட்டும் அனுமதி கொடுத்து மற்றவர்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்காமல் இருக்க அவர் என்ன திமுகவின் அடிப்படை உறுப்பினரா??” என கேள்வி எழுப்பி உள்ளார்.
டாபிக்ஸ்