தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chennai Fraudster 18 Lakhs Rupees Scam Arrested Chennai Frauds

Chennai Fraudster : அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி

Priyadarshini R HT Tamil
Mar 26, 2023 10:36 AM IST

18 Lakhs Cheating : அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது கார்த்திகேயன், எனக்கு வருமானவரித்துறையில் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சர்மிளாவிடம் கூறினார். இதை நம்பிய சர்மிளாவும், தனது தம்பிக்கு அரசுவேலை வாங்கித் தரும்படி கூறினார்.

இதற்காக சர்மிளாவின் தம்பி மோகன் மற்றும் அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் பிரசாத் ஆகிய 3 பேரும் ரூ.18 லட்சத்து 19 ஆயிரம் வரை கார்த்திகேயனின் தோழியான தாம்பரம் அகரம் பகுதியைச் சேர்ந்த யமுனா (27) என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தினர்.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராமல் கார்த்திக்கேயன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சர்மிளா திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கேயன் மற்றும் அவரது தோழி யமுனா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கார்த்திக்கேயன் வேலை வாங்கி தருவதாக பணத்தைப் பெற்று அதில் கார் வாங்கி தோழி யமுனாவுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்தது தெரிய வந்தது. கைதான 2 பேரையும் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரசு வேலையை பணம் கொடுத்து பெற முடியாது. அரசு வேலை வேண்டுமெனில் அதற்கு உதவுவதற்கு அந்தந்த துறையில் இணையதளங்கள் உள்ளன. அதில் உள்ள தகவல்களைப் பெற்று உரியவர்கள் பயன்பெறலாம் அல்லது அரசு பணியாளர் தேர்ணையத்தின் தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மட்டுமே அரசு வேலை பெற முடியும். அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் கூறினால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டார்கள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்