Crime News: ‘பேஸ்புக் காதலனுக்காக தீக்குளிப்பு.. மாரடைப்பில் இறந்த மகன்.. மகளுடன் தூக்கிட்ட தாய்’ காலை ‘க்ரைம்’!
Crime News: ஆகஸ்ட் 21 காலை வரையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிகழ்ந்த திடுக்கிட வைக்கும் க்ரைம் செய்திகளின் தொகுப்புகள் ஒரே செய்தியில் உங்களுக்காக!

தமிழகத்தின் இன்றைய காலை நிலவரப்படி நிகழ்ந்த முக்கிய க்ரைம் செய்திகளின் தொகுப்பு இதோ:
தபால் துறை வேலை.. ரூ.5லட்சம் ஸ்வாகா..!
சென்னை ஆவடி வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான சிவக்குமார். சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிய போது, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த 34 வயதான அருண் ஸ்டீபன் என்பவர், அவரிடம் அறிமுகமாகியுள்ளார். தான் மத்திய, மாநில அரசு பணிகளில் பலரை சேர்த்துவிட்டதாக கூறி ஆசைவார்த்தை கூறியுள்ளார் 2021ல் தபால் துறையில் கார் ஓட்டுநர் பணிக்கு ஆள் எடுப்பதாக கூறி, சிவக்குமாரிடம் ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார் சிவக்குார். இது தொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த அருள் ஸ்டீபன் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சேலத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கணவருடன் விவகாரத்து.. பேஸ்புக் காதலுக்காக தீக்குளித்த பெண்!
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் 28 வயதான முருகவேணி. அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்த அவர், அன்பரசன் என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.