’யார் அந்த Sir?’ ஞானசேகரனின் பின்புலத்தில் யார்? நீதிபதி முன் உண்மையை போட்டு உடைத்த தமிழக அரசு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’யார் அந்த Sir?’ ஞானசேகரனின் பின்புலத்தில் யார்? நீதிபதி முன் உண்மையை போட்டு உடைத்த தமிழக அரசு!

’யார் அந்த Sir?’ ஞானசேகரனின் பின்புலத்தில் யார்? நீதிபதி முன் உண்மையை போட்டு உடைத்த தமிழக அரசு!

Kathiravan V HT Tamil
Dec 28, 2024 12:29 PM IST

கைது செய்யப்பட்ட ஞான சேகரன் ‘சார்’ என்று செல்போனில் அழைத்தது யார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

’யார் அந்த Sir?’ ஞானசேகரனின் பின்புலத்தில் யார்? நீதிபதி முன் உண்மையை போட்டு உடைத்த தமிழக அரசு!
’யார் அந்த Sir?’ ஞானசேகரனின் பின்புலத்தில் யார்? நீதிபதி முன் உண்மையை போட்டு உடைத்த தமிழக அரசு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”புகார் அளிக்க காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் வருவதற்கே பயப்படும் சுழல்தான் உள்ளது. யார் முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை” என கேள்வி எழுப்பி இருந்தனர். 

பின்னர் ஞான சேகரன் ‘சார்’ என்று செல்போனில் அழைத்தது யார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர். குற்ற செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் சிலருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க அவரது செல்போனை வாங்கி விசாரணை செய்ததாகவும், அது ஏரோ ப்ளைன் மோடில் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார். 

சம்பவத்தின் போது தனக்கு பின் பெரியகுழு உள்ளது என்று காட்டவே போன் செய்து உள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறி உள்ளார். மேலும் ஞானசேகரனின் செல்போன் நிறுவனத்திடம் இருந்து சில தகவல்களை கேட்டு பெற உள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் கூறி உள்ளார்.

மேலும் அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படை தன்மை உடனும் இருக்க வேண்டும் என்றும், மாறாக பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது. ஊடகங்களால்தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊடகங்கள் எதிரிகள் அல்ல என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.