Tower Park: 12 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்பாட்டுக்கு வரும் டவர்
அண்ணா நகர் டவர் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு அமைந்துள்ள கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் மிகவும் பழமையான டவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அமைக்கும் பணியானது 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1968 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த பூங்காவில் 135 அடி உயரம் கொண்ட கோபுரம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணா நகர் பகுதியில் முக்கிய அடையாளமாக இந்த டவர் பூங்கா திகழ்ந்து வருகிறது.
பொதுமக்களைக் கவரும் வகையில் பூங்காவில் அந்த கோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் மேலே சென்று பொதுமக்கள் பார்த்தால் சென்னை நகரில் இயற்கை அழகை ரசிக்கலாம். இந்த இயற்கை அழகை ரசிக்கக்கூடிய கோபுரத்தைக் காதல் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை செய்யும் இடமாக மாற்றி விட்டனர்.
காதலில் தோல்வியடைந்த சில காதலர்கள் அந்த கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதன் காரணமாகக் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த கோபுரத்தின் மேல் பொதுமக்கள் ஏறிச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாகப் பொதுமக்கள் கோபுரத்தின் மேலே சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரத்தையும், பூங்காவையும் சீரமைத்துத் தர வேண்டுமெனச் சென்னை மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை மாநகராட்சி, இதற்காக ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பின்னர் கோபுரத்தையும் மற்றும் பூங்காவையும் சீரமைத்துள்ளனர்.
கோபுரத்தைச் சுற்றி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் தடுப்பு கம்பிகள் மற்றும் பக்கவாட்டு பகுதிகளின் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்திற்கு ஏறிச் செல்லும் பொதுமக்கள் கீழே தடுமாறி விழுந்து விடாத அளவிற்கு இந்த பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர், தூண்களில் தமிழ்நாடு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
தற்போது அண்ணாநகர் டவர் பூங்காவில் கோபுர பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டது. இந்நிலையில் இந்த கோபுரம் நாளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட உள்ளது.
இந்த கட்டுமானம் மட்டுமல்லாது இதுபோன்ற எந்த கட்டுமானத்திலும் தற்கொலை செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனப் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.