Today Gold Rate : மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் சரசரனுன்னு குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
Today Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 29) சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.6,415க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate : மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகின்றது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.