Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!
Gold And Silver Rate Today:சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், பொங்கல் தினமான இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. நேற்று வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன்படி, சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், பொங்கல் விடுமுறை தினமான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 14) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,640-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.7,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.