வாவ் சூப்பர்.. தங்கம் விலை சரிந்தது.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ இன்றைய நிலவரம்!
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.13) சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.57,840க்கும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (டிச.12) சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,280க்கும் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,285க்கும் விற்பனையானது.
