Today Gold Rate : ஷாக்கான மக்கள்.. சடசடன்னு உயர்ந்த தங்கம் வெள்ளி விலை.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!
Today Gold and Silver Rate: கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Today Gold and Silver Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இன்று (ஆகஸ்ட் 16) சவரனுக்கு ரூ.80 உயரந்து ரூ.52,520-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.