இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jun 30, 2025 07:57 PM IST

குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, மற்றும் லாப நோக்கம் இல்லாத மனிதாபிமான உணர்வுடன் வணிகங்களை உருவாக்கியதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றம் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு 'கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ்' என்ற விருதை அளித்து கவுரவித்துள்ளது.

இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!
இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

விருது பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 'லாட்டரி கிங்' சான்டியாகோ மார்ட்டினின் மூத்த மகன் ஆவார். இவர் 'சவுத் ஸ்டார் ரயில்' என்ற இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை வழங்குநர் என கூறப்படுகிறது. மார்ட்டின் குழுமத்தின் இயக்குனராகவும், மீடியா, கட்டுமானம், ரயில்வே மற்றும் விளையாட்டு என பல்வேறு வணிகத் துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, மற்றும் லாப நோக்கம் இல்லாத மனிதாபிமான உணர்வுடன் வணிகங்களை உருவாக்கியதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றம் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு 'கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ்' என்ற விருதை அளித்து கவுரவித்துள்ளது.

விருதை பெற்றுக் கொண்ட ஜோஸ் சார்லஸ் மார்டின் "காமன்ஸ் அவையில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 'கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ் விருது' பெற்றதில் மிகுந்த பெருமையை அடைகிறேன்" என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் “நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜார்ஜ் ஸ்மூட் மற்றும் ஆப்பிங்டன் தொகுதி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் பேக்கன் ஆகியோர் வழங்கிய இந்த விருது, குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு மற்றும் இரக்க உணர்வுடன் வணிகங்களை உருவாக்குவதற்கான எங்களின் செயல்பாட்டை கொண்டாடுகிறது”

மேலும், இந்த விருது தலைமைத்துவம் என்பது வெறும் தொழில்முனைப்பு மட்டுமல்ல - இரக்கம், செயல் மற்றும் தலைமுறைகள் தாண்டியும் தாக்கம் ஏற்படுத்துவது என்பதற்கான எனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எனது பயணத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.