Tamil News  /  Tamilnadu  /  Chank Bangle Found In Vembakottai Archaeology Excavation Work
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், செப்பு காசு கண்டெடுப்பு.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், செப்பு காசு கண்டெடுப்பு.

Vembakottai excavation: வெம்பக்கோட்டை அகழாய்வில் வளையல், செப்பு காசு கண்டெடுப்பு

22 September 2022, 16:05 ISTKarthikeyan S
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 16:05 IST

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் சங்கு வளையல், சுடும் மண்ணால் ஆன முத்திரை, செப்பு காசு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றும் வரும் தொல்லியல் கள ஆய்வில் பழங்கால சங்கு வளையல், சுடும் மண்ணால் ஆன முத்திரை, செப்பு காசு போன்ற அரிய வகை தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உட்பட தமிழகத்தின் 7 இடங்களில் புதிதாகத் தொல்லியல் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி வெம்பக்கோட்டை தாலுகா வைப்பாற்றுக் கரையில் அமைந்துள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடகரையில் கடந்த மார்ச் 16ம் தேதி அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன.

மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, தங்க அணிகலன்கள் ஆகியவை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

<p>வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்துள்ள அரிய வகை தொல்பொருட்கள்.</p>
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்துள்ள அரிய வகை தொல்பொருட்கள்.

இதுவரை சுமார் 15 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை (செப்.22) ஒரு குழியில் நடந்த தொல்லியல் அகழாய்வில் சங்ககாலத்தில் பயன்படுத்தபட்ட சுடும் மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல், ஆண், பெண் உருவம் பொறித்த செப்பு காசு ஆகியவைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் வாணிப தொடர்பு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

  • Share on Twitter
  • Share on FaceBook